“பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!

சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன்.

தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம்.

’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப் பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு-

கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்)RFIDஉதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:

தமிழா-மியான்மர்

சபா சந்தகன் – மலேசியா

கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா

கடாலன் – ஸ்பெயின்

நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்

சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ

திங் வெளிர்- ஐஸ்லாந்து

கோமுட்டி-ஆப்ரிக்கா

இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.

இன்னொரு சுவாரஸ்யிமான விஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில் நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!!

பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.

Tamil bell Found in New Zealand

Tamil bell Found in New Zealand

நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்க http://en.wikipedia.org/wiki/Tamil_bell சொடுக்கவும்.

இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.

இது பற்றி அவர் பல ஆதாரங்களை முன் வைத்திருக்கிறார். அடுத்த மாதம் இது பற்றிய புத்தகம் அவர் வெளியிட இருப்பதால் நான் பல விஷயங்களை இங்கே பகிர இயலாது.

கலிங்க பாலு அவர்கள் எந்த ஒரு அரசு உதவியுமில்லாமல் இத்தனை ஆண்டுகள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இப்போது தான் ஒரு நிறுவனம் நிறுவி அவருடைய ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறார். இது பற்றிய ஆர்வமுள்ளவர்கள் அவருக்கு உதவலாம். அவருடைய இமெயில் முகவரி –kalingatamil@yahoo.co.in

நான் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் என்னை வருத்தப் பட வைத்த விஷயம், அரங்கம் நிறைய தமிழ் ஆர்வலர்கள் குழுமியிருந்தனர். ஆனால் பெரும்பாலும் நரைமுடிகளையே காண முடிந்த்து. மொத்தமே 10 இளைஞர்களே என் கண்ணில் பட்டனர். அதிலும் மூவர் ஒலி ஒளி அமைப்பாளர்கள்.

நண்பர்களே நான் அந்நிகழ்ச்சி முடிந்ததும் அதன் ஒருங்கினைப்பாளர்களிடமும் கலிங்க பாலுவிடமும் தனிப்பட்ட முறையில் உரையாடிய போது Facebookகில் நம் சங்கத்தை பற்றியும் நம்முடைய தமிழார்வத்தை பற்றியும் விளக்கி நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வதாக சொன்னேன். அதற்கு அவர்கள் சந்தோஷப் பட்டு ஒரே ஒரு உதவி மட்டுமே கேட்டனர். இளைஞர்களிடம் அதுவும் குறிப்பாக தமிழில் பேசுவதையே இழுக்காக கருதும் இளைஞர்களிடம் இந்த தகவல்களை கொண்டு செல்ல உதவ வேண்டும் என்றார்கள்.

நம்மால் முடிந்தவரை இந்த தகவலை பகிர்ந்து நம்முடைய வரலாற்றை பலருக்கு கொண்டு செல்லுவோம்.

நன்றி.

வினோதன்.

FB Page: https://www.facebook.com/vinod.alagumalai?sk=notes

Advertisements

63 Comments

Filed under Tami Country

63 responses to ““பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!

 1. அருமையான கட்டுரை,

  இப்போது தான் தமிழர் வரலாறு ஒரு அறிவியல் கண்ணோட்டத்தில் உண்மையிலேயே பயணப்பட ஆரம்பித்துள்ளது. கலிங்கபாலுவின் புத்தகம் தமிழக வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அமையுமென்றால் அது தமிழுக்கு நல்ல காலம்.
  உங்களின் இந்த வலைப்பூ நல்ல அரிய பல தகவல்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து வெளியிடுங்கள்,
  படிக்க காத்துக்கொண்டிருக்கிறோம். உதவும் காத்துக்கொண்டு இருக்கிறோம்.

  ச.பாலமுருகன்
  தேவிகாபுரம்

 2. தமிழ்ச்​செல்வா

  அரு​மை இது​போன்ற நிகழ்ச்சிக​ளை நி​றைய ​வெளியிடுங்கள்.நண்ப​ரை​தொ​லை​பேசிஎண்​கொடுத்தால்சிறப்பாகஇருக்கும்

 3. தமிழகத்தின் பெருமை

 4. boobathi

  naintri iya
  tamil

 5. sukumar

  i need to buy this book…..very much interested to learn the new research about tamil history

  • நா. தட்சணாமூர்த்தி

   தமிழுக்கு என் வணக்கம் by நா. தட்சணாமூர்த்தி

 6. Ponnambalam Kalidoss Ashok

  தமிழர் வரலாறு ஒரு அறிவியல் கண்ணோட்டத்தில் உண்மையிலேயே பயணப்பட ஆரம்பித்துள்ளது… a great journey on Tamils knowledge..a giant leap with tiny tortoise.. ..

 7. S.T.Gurusamy

  மிகவும் அருமையான கட்டுரை. பாலுவிற்கு பாராட்டுக்கள்.
  சு.த.குருசாமி, மதுரை.

 8. rajasekar k

  i love tamil…tamil parampariyam…….useful information..

 9. babu

  தமிழன் வரலாறுகு தலை வணக்கம்.
  எபடிக்கு
  தோழர் பாபு

 10. babu

  தமிழன் வரலாறுகு தலை வணக்கம்.
  இப்படிக்கு
  தோழர் பாபு

 11. Madhavan

  மலர போகும் ஏழுச்சிற்காக காத்திருப்போம்….!

 12. prasath

  vaalga thamil

 13. ரா. சிவா

  பல தமிழர்கள் அறியபடவேண்டிய உண்மை. என்னால் முடிந்தவரை இந்த கட்டுரையை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கட்டுரையை தந்தமைக்கு நன்றி.
  – ரா.சிவா

 14. we r waiting u r results sir note:sir i have no tamil softwares so pls appologes sir ur really great sir

 15. lakshme gayathre

  very much interesting fact…..actually i am a studying B.F.Sc {bachelors in fisheries science}……i knew about this in my studies…..if u want any information about anything i will help u…..this work also very nice….all the best:)

  • thiruppathy

   hi my name is Thiruppathy and I am from Malaysia I totaly agry with you but I am a bit upset that in Malaysai, Indians do not know wh we are so I and my friends have joined forces in writing a book but since we are just 14 we are lack of contents although we have searched in the internet there are lot of unclear informations and a lot of fake, so I hope you would help us out here pls do not only for us but for OUR TAMILANS if there is any information you could contribute pls e mail to me in thiruppathyks@gmail.com
   thank you

 16. i like this history iam balamurugan from chandigarh (ut)

 17. sivaraj

  பல தமிழர்கள் அறியபடவேண்டிய உண்மை. என்னால் முடிந்தவரை இந்த கட்டுரையை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் தமிழர் வரலாறு ஒரு அறிவியல் கண்ணோட்டத்தில் உண்மையிலேயே பயணப்பட ஆரம்பித்துள்ளது

 18. RAJAN VEL

  THANKYOU BEST PLESE SHARE TO YOUTUB MY RUQUEST BY RAJAN VEL G6666444@GMAIL .COM

 19. விஜய்

  இக்கட்டுரை பற்றிய தகவல்களை என்னால் முடிந்தவை தமில் இனமக்கலுக்கு ஊருவேன்

  • nethaniel

   thagkalathu katurai varavetkathakkathagum . innum ithu pontravai uruvakattum. uruthippadutthuvathatku aatharanggalai serkkavum . nantree unkal netha

 20. katapaa

  Naan THamilan

 21. naren

  great article .i want to meet mr.kalinga. can you provide his contact number or email.id ?

 22. RAGHAVENDRA

  It’s really worth reading…. NANDRI

 23. c.senthilkumar

  enaku romba pidithullathu . nan oru tamil aarvalan.

 24. tamil valga tamilai vananguvom tamilai podruvom tamilan eanru perumai paduvom vanakkam tamil

 25. MOHAMMED THAHIR

  TAMILAN ENDRU SOLLADA THALAI NIMIRNDU NILLADA

 26. M SIVALINGESWARAN

  I love to read these articles on Tamil and its lovable history. I shared in facebook for the knowledge of others and my friends. msivalingeswaran@yahoo.com

 27. Hardy

  Hai tamil bell patti sollugga

 28. bala

  tamilan enpathil eilla illa perumai perukeran…tamil mozhiliku eadu eathu intha ualakthil ….

  vanakathudan
  balachandran

 29. Devidraja

  இன்னும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தமிழ் உணர்ச்சியை தூண்ட வேண்டும் உங்கள் மூலமாக தமிழ் வாழ்க!்தமிழன் வாழ்க!

 30. Arumaiyana thakavallkal.

 31. SASI

  MIGA AZHAGANA THAGAVAL.”TAMILARGAL ANNAITHU THURAIYILUM MUNNODI” ENPATHARKANA SANRUGALAE IVAI.MIGAVUM MAGILCHIYAGA IRUKIRATHU.AANAL TAMIL PESUVATHAIYAE VERUPAGA PARKUM INRU ANTHA VAZHIYIL VANTHAVARGALA NAM ENA SANTHEGAM ELUGIRATHU

 32. i am proud of this attempt and congratualations we will always with you
  and would like to help you thank you

 33. mohamed mubarak

  Kal thonri man thonra kalathin mun thonry mootha kudi . Tamilinam

 34. ravi

  இந்த ஆய்வு கட்டுரைக்கு நன்றி.
  அறிவியல் ரீதியாக தமிழ் கட்டுரை வந்தது சிறப்பு.

 35. அருமையான பதிவு.நன்றி

 36. arunadas singaaravelan

  I REQUEST GOVT OF TAMIL NADU TO SUPPORT THESE LIKE INDEPENDENT RESEARCHES

 37. selvaraju nagarajan

  The article of Thiru.Kalingabalu is really exiting.Please intimate where can i get his book to my mail selva1948_udt@yahoo.com
  selvaraju nagarajn

  • alagirisamy

   முகநூலில் ஒரிசா பாலு என்ற பெயரை தேடி பாருங்கள்.வரும்.அவரது அலைபேசி எண் 99402 40847அன்புடன் அழகிரிசாமி.

 38. preethi

  tamilin mel intha alavu anbu vaithulla anaivarukkum en iniya tamil vanakkam

 39. prp

  VERY NICE SIR,

 40. ravikumar

  இந்த ஆய்வு கட்டுரைக்கு நன்றி.
  அறிவியல் ரீதியாக தமிழ் கட்டுரை வந்தது சிறப்பு.

 41. nandakumar

  ivalavu research seireenga, ana ungala thodarbu kola vazhi teriyala , feel upset . please give your number. tamil patru ulavanga enai suthium irukanga.do the needful please.

 42. Munibabu

  இந்த ஆய்வு கட்டுரைக்கு நன்றி.
  அறிவியல் ரீதியாக தமிழ் கட்டுரை வந்தது சிறப்பு.

 43. srinivasan

  vaalga tamil

 44. Thanaraj
  1836 la newzeland la tamil la aluthuna bell kaintu putecherukaga na world fulla tamil la tha pesunagala frist lanage tamil thana

 45. sutha

  மிகவும் அருமையான கட்டுரை. பாலுவிற்கு பாராட்டுக்கள்.அறிவியல் ரீதியாக தமிழ் கட்டுரை வந்தது சிறப்பு

 46. saranraj

  iya nanum antha nigazchiyil pangu petren . iya orisa bala arumaiyaga vilakkinar. thamizhan than ulagin munnodi enru koorinar atharkkundana sanrugalaiyum eduthu koorinar ennai ponravargalukkum antha nigazhi perudhaviyai amainthathu

 47. Muthukumar

  There are lot if hidden truth about our Tamil and Tamil people’s achievements,discovery…

  You can refer Thiru.Sattur sekaran’s ” kumari kandam unmaye”
  which will prove that all the world cultures created by Tamilan only.

  Chandrasekaran (Sattur Sekaran) claims he learned
  120 languages in 35 years, claims that all the
  languages in world are based on Tamil grammar.
  Very interesting stuff.

 48. raja

  Tamilan Endru Solla da Thalai Nimirnthu Nilla da Vazha Tamil.

 49. Nangavaram Tamil solai Pulavar Raja

  Nice Thought. Tamilan Enru solvatharku Naan Perumai adaihiren Nanri Thozha Ikkaruthai Phirnthu Kondatharku

 50. jasmine buelah

  osum story……..i want to share this story to my frs….

 51. many comments mentioning their proudness of being a tamil. but no proper plan to continue the glory

 52. Pingback: “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை! | gnanasekareswar

 53. Chandru

  No Proper to Continue

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s